அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது பலரையும் அதிர்சியடைச்செய்துள்ளது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் டாலர் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
இன்றைய வர்த்தக நேரத்தின் இடையே டாலருக்கு நிகாரான ரூபாயின் மதிப்பு 79 ரூபாய் அளவுக்கு சரிந்தது. இது இந்திய ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சியாகும்.
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரக் காரணம், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் இந்தியாவில் இருந்து தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கின்றன.
இதுமட்டுமின்றி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இனி கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால் இந்திய ரூபாயின் மதிப்பும் இன்னும் கிழே இறங்கும்.
மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் 80 ரூபாயை தாண்டும் அச்சமும் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
கடைசி கட்டமாக, ரூபாய் மதிப்பு சரிவதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர் கரன்சிகளை, அதிக அளவில் வெளியிட்டு ரூபாய் மதிப்பு சரிவடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
1947ம் ஆண்டு ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு 3 ரூபாய் 30 காசுகளாக இருந்தது. 1967ம் அண்டு 7 ரூபாய், 50 காசுகளானது. 1990ம் ஆண்டு 17 ரூபாய் ஆனது. உலகமயமாக்கலில் கையெழுத்திட்ட 1990 களின் மத்தியில் இரட்டிப்பாகி 32 ரூபாய் ஆனது.
2000ல் 43 ரூபாயாகவும், உலக பொருளதாரம் சரிவு கண்ட 2007ம் ஆண்டில் மீண்டும் இந்திய ரூபாய் வலுவடைந்து, 37 ரூபாயாக நிலை கொண்டது குறிப்பிடதக்கது. 2012ல் 60 ஆகவும் தற்போது 79 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சில நேரங்களில் சர்வதேச நிதியம், உலக வங்கி மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் அழுத்தங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்ட வரலாறும் உண்டு.