Homeசற்றுமுன்நாட்டில் ஏற்றுமதி 3 லட்சம் கோடியாக உயர்வு- நல்ல செய்தியாக இருக்கிறது-ஜி.கே.வாசன்

நாட்டில் ஏற்றுமதி 3 லட்சம் கோடியாக உயர்வு- நல்ல செய்தியாக இருக்கிறது-ஜி.கே.வாசன்

தி மு க தேர்தல் நேரத்தில் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக விருதுநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

01 - Dhinasari Tamil

காமராஜர் பிறந்தநாள் விழா வருகிற 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது விழா கொண்டாடப்படுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விருதுநகரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மிகப்பிரமாண்டமாக மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் ஆக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழலை காரணம் காட்டி வருடத்தில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பட்டாசு தொழிலை முடக்குவதை கைவிட வேண்டும். சரவெடி தயாரிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசுவதற்காக இருந்தோம். இந்த முறை சரியாக பாராளுமன்றம் நடைபெறாததால் அதைப்பற்றி பேச முடியவில்லை. பட்டாசு ஆலைகளை ஆய்வு என்ற பெயரில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள். பட்டாசு ஆலைகளை முறைப்படுத்த வேண்டும் சீர்படுத்த வேண்டும் என்றால் அதற்கான காலக்கெடுவை அவர்களுக்கு அரசு வழங்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு என்ற பெயரில் உரிமையாளர்களிடம் எந்தவிதத்திலும் சங்கடமும் ஏற்படுத்தக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு ஆணையம் பட்டாசு தொழிலில் கூடுதல் கவனம் காட்டி பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நாட்டில் ஏற்றுமதி 3 லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்திருப்பது கொரோனாவிற்கு பிறகான நல்ல செய்தியாக இருக்கிறது. கொரோனா தற்போது பல இடங்களில் பரவத் துவங்கி இருக்கிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நகரம், கிராமம் போன்ற பகுதிகளில் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க அரசு விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படைகள் கைது செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது தொடர்ந்து மீனவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதை இலங்கை அரசு வழக்கமாக கொண்டு உள்ளது. இலங்கை அரசு இதை உடனடியாக நிறுத்த வேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கையுடன் பேசி இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை காணாமல் போய் மீண்டும் கிடைத்திருக்கிறது. கிடைத்திருப்பது நல்ல செய்தியாக இருந்தாலும் பல இடங்களில் இதே போல் நடந்து வருகிறது. அதை அரசு கண்காணித்து இதேபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மதத்தைப் பற்றியும் மத உணர்வுகளை பற்றியும் எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் தவறாக சித்தரிக்க கூடாது பரப்பவும் கூடாது.

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வை பாஜக மிகத் தெளிவாக செய்திருக்கிறது. ஒரு பழங்குடியினப் பெண்ணை தேர்வு செய்திருக்கிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்களுக்கு வாக்களித்து அவர்களை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்பட வேண்டும் அது முறையாக இல்லை என்கின்ற அச்சம் மக்களிடம் இருக்கிறது. அதை முறையாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு அடக்கவேண்டும்.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய ஒரு குழு அமைத்து அதனை தடை செய்யாமல் காலம் தாழ்த்துவது சரியல்ல. உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும் என்பது சாதாரண மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆன்லைன் ரம்மி தொடர தொடர ஏழை எளிய மக்களின் வாழ்வு கேள்விக்குறியாக இருக்கிறது.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தவறு உறுதி செய்யப்படும் பட்சத்தில் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் இதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களை ஏமாற்றி வருகிறது. முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக இருந்து வருகிறது. மேலும் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறிய அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ளது. மேலும் வருடம் ஒரு முறை உயர்த்துவோம் என கூறியுள்ளது இது மக்களின் விரோத போக்கு செயல் ஆகும்

விருதுநகர் எம்எஸ்எம்இ விருது வாங்கி இருக்கிறது. எம்எஸ்எம்இ யில் அதிகப்பங்கு மத்திய அரசு உடையது. கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டது. அந்த சிறு குறு தொழில் மேலும் முன்னேறுவதற்காக மத்திய அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என எம்எஸ்எம்இ யில் பல திட்டங்களை தந்தது அதன் அடிப்படையில் சிறு குறு தொழில் முதல் இடத்தை பெற்றிருக்கிறது.

மேலும் தமிழகத்தில் கல்வியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஒரே தலைவர் கல்விக்கண் திறந்த காமராஜர் வருங்காலங்களிலே மக்கள் காமராஜரின் ஆட்சியை நினைத்து பார்த்து சிந்தித்து அதற்கு தகுந்தவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
75FollowersFollow
74FollowersFollow
3,950FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பொன்னியின் செல்வன்-3 நாட்களில் ரூ.200 கோடி வசூல் ..

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு வசூலில் கலக்கும் பொன்னியின் செல்வன் ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்30இல்  வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

Latest News : Read Now...

Exit mobile version