Homeசற்றுமுன்உறையூர் வெக்காளியம்மன் கோயில் திருக்குட முழுக்கு விழா

உறையூர் வெக்காளியம்மன் கோயில் திருக்குட முழுக்கு விழா

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் திருக்குட முழுக்கு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

newproject 2022 04 19t144644 546 1650360058 - Dhinasari Tamil

திருச்சியில் பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் கோயில் உறையூரில் அமைந்துள்ளது. சோழ மன்னர்களின் குல தெய்வமாகவும், திருச்சி நகரின் காவல் தெய்வமாகவும் விளங்கி வரும் இந்த கோயிலில், அம்மன் மூலஸ்தானத்திற்கு மட்டுமே பக்கவாட்டு சுவர் உள்ளது. வானமே மேற்கூரையாக கொண்டுள்ள வெக்காளியம்மன் காற்று, மழை, வெயில் உள்ளிட்ட அனைத்து இடர்பாடுகளையும் தானே தாங்கிக் கொண்டு, மக்களை காத்து வருவதாக ஐதீகம்.

இக்கோயிலில் திருக்குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. அர்த்தமண்டபத்தில் வெள்ளிக் கதவு பொருத்தப்பட்டுள்ளது. கோயில் பிரகாரங்கள், கோபுரங்கள் வர்ணம் பூசி பொலிவு படுத்தப்பட்டுள்ளது. புதிய கருங்கல் அர்த்த மண்டபம், அலங்கார மண்டபம், தூண்களை கலைநயத்துடன் புதுப்பித்தல், அனைத்து மண்டபங்கள், ராஜகோபுரம், விமானங்கள் பழுது நீக்கி புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, ஜூலை 1ஆம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கியது.

2ஆம் தேதி அய்யாளம்மன் படித்துறையிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து முதற்கால யாக பூஜைகள் தொடங்கின. 3ஆம் தேதி இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. ஜூலை 4ஆம் தேதி நான்காம் கால யாக பூஜையும், ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. ஜூலை 5ஆம் தேதி ஆறாம் கால யாக பூஜையும், ஏழாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. ஜூலை 6ஆம் தேதி அதிகாலை எட்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.20 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு ஆலயம் வலம் வந்து விமானம், மூலாலயம் சேர்ந்தது.

kumbabheshekam vekkaliamman - Dhinasari Tamil

பின்னர், சிறப்பு பூஜைகளுடன் காலை 6.45 மணிக்கு விமானங்கள், கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  காலை 10 மணிக்கு மஹா அபிஷேகம், கலச பூஜைள் மாலையில் வெக்காளியம்மன் வீதி உலா நடைபெற்றது.

WhatsApp Image 2022 07 06 at 8.55 .53 AM - Dhinasari Tamil

இந்த கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,117FansLike
376FollowersFollow
70FollowersFollow
74FollowersFollow
3,261FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...