திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த புதன்கிழமை மஹாகும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இன்று கொடிமர பிரதிஷ்டை விழா நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கெடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த புதன்கிழமை மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் லட்சக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த கோவிலில் காலை மாலை வேளைகளில் பூஜை நடைபெற்று வருகிறது. இதில் அதிக அளவில் பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று காலை 5 மணி அளவில் கணபதிஹோமம் பிராயசித்த ஹோமம், தத்துவஹோமம், தத்துவகலசம் பிரம்ம கலச பூஜை, நித்திர கலச பூஜை ஆகிய பூஜைகள் காலையில் நடைபெற்றது.
ஆலயத்தில் நேற்று கொடிமர பிரதிஷ்டை பூஜைகள் துவங்கியது. இன்று காலை 5 மணிக்கு 72 அடி உயர கொடிமரம் பிரதிஷ்டை வேத பாராயண முறைப்படி நடைபெற்றது.
மாலை திருவிழாவுக்காக கொடியேற்றம் நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது. பதினொன்றாம் நாளான நாளை மாலை 5 மணிக்கு ஸ்ரீபூதபலி, அத்தாழ பூஜை, நடக்கிறது.
கொடிமர பிரதிஷ்டை செய்தால் திருவிழா எடுக்க வேண்டும் என்பது ஆகம விதிகளில் ஒன்று.
அதனால் இன்று மாலை புதியதாக அமைக்கப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டு ஆறு நாட்கள் திருவிழாவும் துவங்க உள்ளது.
கொடி மரத்திற்காக கேரளமாநிலம் பந்தனந்திட்டை மாவட்டம் கோன்னி வனப்பகுதியில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந்தேதி 70 அடி உயரம் கொண்ட பிரமாண்ட தேக்கு மரம் டிரைலர் வாகனத்தில் கொண்டு வரப்பட்டது.
பின்னர் கோவில் மேற்குவாசல் பகுதியில் நிறுவப்பட்டது. கும்பா பிஷேகத்திற்கு 200 கிலோ செம்பு பயன்படுத்தி, 42 கவசங்கள் உருவா க்கப்பட்டது. இந்த கவச ங்கள் கேரள மாநிலம் காயங்குளம் பகுதியில் உருவாக்கப்பட்டது.
பின்னர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒன்றரை கிலோ தங்க முலாம் பூசப்பட்டது. வெள்ளியில் செய்யப்பட்ட கருடாழ்வார் சிலை அதன்மீது தங்கமு லாம் பூசப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கொடிமரத்தின் உச்சியில் பொருத்தப்பட உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கருடாழ்வார் சிலையை இஸ்கான் அமைப்பு தலைவர் மது பண்டிட், கோவில் தந்திரி கோகுலிடம் ஒப்படைத்தார். பின்னர் கருடாழ்வார் சிலைக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவில் அர்ச்சகர் கருடாழ்வார் சிலையை தலையில் வைத்தபடி பக்தர்கள் புடைசூழ கோவில் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக வந்தார். தொடர்ந்து சிலைக்கு உதயமார்த்தாண்ட மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இப்போது அந்த கருடாழ்வார் சிலை கொடி மரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது.
இதன்படி கருடாழ்வார் சிலையும் சேர்த்து 72 அடி உயரம் கொண்டதாக இந்த கொடிமரம் உள்ளது.
இந்த கொடிமரத்துக்காக இஸ்கான் அமைப்பின் தலைவர் மது பண்டிட் நிதி ஒதுக்க, ஸ்தபதி பந்தியூர் வினோத்பாபு தலைமையில் தங்கமுலாம் பூசிய செம்புக்க வசம் அமைக்கும் பணி நடந்தது.
இன்று மாலை ஆறரை மணிக்கு மேல் கோவில் தீபாராதனையை த்தொடந்து கொடிமரத்தில் கருடன் இலச்சினை கொண்ட கொடி ஏற்றப்பட்டதும் உற்சவம் துவங்கி நடைபெறும்.
வரும் 14. ம் தேதி வரை திருவிழா பூஜைகள், காலை மாலையில் ஸ்ரீபூதபலி எழுந்தருளல் நடைபெறும்.13-ந்தேதி ஆதிகே சவப்பெ ருமாள் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்வு கோவில் அரசம ரத்தை யொட்டிய பகுதியில் நடைபெறும்.14ந்தேதி காலை ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பு ஆறாட்டு கோவிலி ன் கிழக்கு வாசல் பகுதியை யொட்டிய பரளியாற்று கிழக்கே கடவில் நடை பெறுகிறது.