December 8, 2024, 8:39 PM
27.5 C
Chennai

உ. பி வேகமாக சென்ற வாகனம் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் 6 பேர் பலி..

உத்தரப் பிரதேசத்தில் வேகமாக சென்ற வாகனம் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் சித்தரக்கூட் மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்துள்ளது .

இது குறித்து சித்தரக்கூட் மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர ராய் கூறியிருப்பதாவது,
தக்காளி ஏற்றி வந்த வாகனம் ரௌலி கல்யான்பூர் கிராமத்தின் அருகே வந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. காலை 6.30 மணியளவில் நடைபெற்ற இந்த சோக நிகழ்வில் வாகனம் 8 பேர் மீது இடித்துச் சென்றது. இந்த சம்பவத்தில் நரேஷ் (35 ), அரவிந்த் (21 ), ராம் ஸ்வரூப் (25), சக்கா (32 ), சோம்தத் (25 ) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பகவான் தாஸ் (45 ) மற்றும் ராம் நாராயன் (50) ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் பந்தா மாவட்டத்தின் ஜாரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ரௌலி கல்யான்பூர் கிராமத்திற்கு திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்துள்ள அவர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். என்றார்.

ALSO READ:  திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா சிறப்பு ரயில்!

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி சுப்ராந்த் சுக்லா இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். காயமடைந்த இருவரின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். 

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week