அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி கூடியது.
அதிமுகவில் சமீபமாக ஒற்றை தலைமை பிரச்னை விஸ்ரூபம் எடுத்துள்ளது. இன்று ஒற்றை தலைமை கோரிக்கையை முன்னிறுத்தி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனிடையே ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விவாதம் நடைபெற்றது. இதில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் காரசாரமாக வாதிட்டனர். இந்த வாதம் பல மணி நேரம் நடந்தது.
இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்ட நீதிபதி, ‘இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு’ வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன் படி இன்று இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அதில்; அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். அதிமுக கட்சி விதிகளுக்குட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும். கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி கூடியது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் வானகரத்தில் தொடங்கியது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு திங்கள்கிழமை காலை 9.15 தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிரந்த பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த 4 மாதங்களுக்கு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.