தடையை உடைத்து ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்தார்.
வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று காலை 9 மணிக்கு ஐகோர்ட் தீர்ப்பு வழங்குகிறது. காலை 9.15 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனிடையே அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரத்தை நோக்கி எடப்பாடி பழனிசாமி சென்றுகொண்டிருக்கிறார். அதேசமயம் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார். இதனால் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மோதல் உச்சம் அடைந்த நிலையில் அதிமுக தலைமையகம் நோக்கி ஓபிஎஸ் வரும் நிலையில் அவரது வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். தடையை உடைத்து ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்தார். இதனிடையே சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இதனால் போர்க்களம் போல் அதிமுக தலைமை அலுவலகம் காட்சியளிக்கிறது.