சபரிமலை ஐயப்பன் கோயிலில்
கர்கடகம் ஆடி மாத பூஜைகளுக்காக ஜூலை 16ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும்… 16ம் தேதி முதல் பக்தர்களுக்கான நுழைவு அனுமதிக்கப்படும் ஜூலை 21ம் தேதி இரவு நடை மூடப்படும்.ஐயனை தரிசனம் செய்ய இன்று முதல் முன்பதிவு ஆன்லைன் விர்ச்சுவல் க்யூ முறையில் துவங்கியுள்ளது.https://sabarimalaonline.org/#/login மூலம் பதிவு செய்யலாம்.
சபரிமலை சுவாமி ஐயப்பன்
கோவிலில் ஜூலை 16ம் தேதி தீபம் ஏற்றப்படுகிறது.பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.சபரிமலை கோயில் ஜூலை 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை திறந்திருக்கும்.அய்யப்ப பக்தர்கள் ஆன்லைன் விர்ச்சுவல் க்யூ முறையில் முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம்.இதற்கு ஸ்பாட் புக்கிங் அமைப்பும் தயார் செய்யப்பட்டுள்ளது. நிலக்கல் வரும் ஐயப்ப பக்தர்கள் இம்மாதத்திற்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம். 17.07.2022 காலை 5 மணிக்கு திருநடை திறக்கப்படுகிறது.பின் வழக்கமான அபிஷேகம், நெய் அபிஷேகம் மற்றும் இதர பூஜைகள் நடைபெறும்.
நடை திறக்கப்படும் 5 நாட்களும் புஷ்பாபிஷேகம் நடைபெறும்.பூஜைகள் முடிந்து 21ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை ஐயப்பன் சன்னிதி நடை அடைக்கப்படும்.