ரயில் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமான திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்புக்கட்டண சிறப்புவண்டி(06029/06030)
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ஐந்து முறை இயக்கப்பட உள்ளது.இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இயக்கப்பட்ட திருநெல்வேலி-தென்காசி-மதுரை வழித்தடம்,கட்டணம் மற்றும் நேரத்தில் ஐந்து நடைகள் இந்த சிறப்புவண்டி இயக்கப்படவுள்ளது.
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்(06030):
21-ஜூலை-2022 முதல் 18-ஆகஸ்டு-2022 வரை (வியாழன் தோறும் இயங்கும்.மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி(06029):
22-ஜூலை-2022 முதல் 19-ஆகஸ்டு-2022 வரை வெள்ளிதோறும் இயங்கும்.இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 1 ரயில் மேலாளர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்படும்.
பொதுமக்கள் இரயில் பயணிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளநிலையில் அதிக பயணிகள் பயன்படுத்தும் அதிகவருவாய் ஈட்டும் இந்தரயிலை தினசரி ரயிலாக இயக்க வலியுறுத்தி வருகின்றனர்.
திருநெல்வேலில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது நிறுத்தம் செய்யப்பட்ட இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலில் இருந்து அம்பா சமுத்திரம், பாவூர்சத்திரம், தென் காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.இந்த ரயிலை அதிகளவில் பயணிகள் பயன்படுத்தி நல்ல வருமானம் கிடைத்தது.இந்த ரயிலையும் இதே வழித்தடத்தில் தினசரி ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.