அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பதை எதிர்த்து 4,000-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி விற்பனை கடைகளை அடைத்து இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வணிகப் பெயரில் அல்லாமல் பையில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, வரும் 18-ம் தேதி அமலுக்கு வர உள்ளது. அரிசிக்கு5 சதவீதம் ஜிஎஸ்டி அமல்படுத்தினால் ஒரு கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை விலை அதிகரிக்கும் என்று அறிவித்தனர்.
எனவே, அரிசிக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இன்றைய தினம் தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மொத்தவிற்பனை கடைகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் அடைக்கப்படும். என்று தெரிவித்தனர். கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், உத்தர பிரேதசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரிசி வணிகர்கள் இன்றைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நம் நாட்டில் அரிசிதான் ஏழை, நடுத்தர மக்களின் தினசரி பிரதான உணவு. இந்த நிலையில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மத்திய அரசு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பது ஏற்புடையது அல்ல. இதனால், அரிசி கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விலை உயரும் என்று தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.சிவானந்தன் கூறியுள்ளார்.
எனவே, இந்த வரி விதிப்பை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 3,000 அரிசி ஆலைகள் சார்பில் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம் இந்த போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உணவு பொருட்களுக்கு இதற்கு முன்பு ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. உணவுப் பொருட்கள் மீது வரி போட்டால் அது பொதுமக்களை பாதிக்கும். உணவு பொருட்கள் மீதான 5 சதவீதம் ஜிஎஸ்டியை கண்டித்து அகில இந்திய அளவில் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது .நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்றும், நாளையும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. சேலத்தில் லீ பஜார் வர்த்தக சங்கத்தினர் நாளை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.. சுமார் 300 கடைகள் அடைக்கப்படும் என்று சேலம் லீ பஜார் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஹரிஹரன் பாபு கூறியுள்ளார்.
