
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதி தோ்தல் இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 99.18% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் அளித்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.நாடு முழுவதும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தனது வாக்கை பதிவு செய்தனர். புதுடெல்லி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இந்தநிலையில் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.
அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் மாலை 5 மணிவரை நடைபெற்றது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4-5 மணி வரை வாக்களிக்க நேரம் அளிக்கப்பட்டது. அதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் நாசர் ஆகியோர் வாக்களித்தனர். இந்த நிலையில், 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 99.18% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் அளித்துள்ளார். ஜனாதிபதி பதவிக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. நாடு முழுவதும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தனது வாக்கை பதிவு செய்தனர்.