
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகப் பிரதிநிதிகள் அழைத்து விடுத்தனர்.
சென்னையில் ஜூலை 28-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமருக்கு அழைப்பு விடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்வதாக இருந்தது. ஆனால், கரேனா தொற்று காரணமாக முதல்வர் செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டது.
இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு பிரதமர் நலம் விசாரித்தார். அப்போது அவரிடம் பேசிய முதல்வர், சென்னையில் ஜூலை 28-ம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டு போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு, தான் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, விளையாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும், துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதன்படி, இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, விளையாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோர் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்