
நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரெளபதி முர்மு முப்படைகளின் மரியாதையை ஏற்றார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த திரெளபதி முர்முவுக்கு முப்படைகள் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. திறந்த வாகனத்தில் சென்ற குடியரசுத் தலைவர், படைகளின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.