
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா திருஉருவ சிலைக்கு இந்து
மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.அவர் செய்தியாளர் மத்தியில் கூறியபோது தமிழகத்தில் வெகு சீக்கிரத்தில் மாற்றங்கள் வரும் என பேசினார்.
பாரத பிரதமர் இல்லம்தோறும் தேசியக்கொடி உள்ளம் தோறும் தேசபக்தி என அறிவித்துள்ள நிலையில்
திராவிடம் அல்ல ஒன்றியம் அல்ல உள்ளந்தோறும் தேசபக்தி என்று கூறி கட்சியினர் முழக்கம் ஈட்டனர். உடன் விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் தலைவர் சரவண கார்த்திகேயன், மாநில துணை தலைவர் குணசீலன், மாவட்ட தலைவர் லெனின், மாவட்ட அமைப்பாளர் சிவா, அமைப்பு குழு தலைவர் பொன்னுச்சாமி, வடக்கு ஒன்றிய தலைவர் சிவசக்தி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின் செய்தியாளர் சந்திப்பில்,அவர் கூறுகையில்,
இந்திய சுதந்திர அமுத விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் ஜூலை-15 முதல் ஆகஸ்ட் 15 வரை சுதந்திர போரட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை போற்றும் வகையாக நினைவிடங்களில் மரியாதை செய்து வருகிறோம் என தெரிவித்தார்.
குமாரசாமிராஜா பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்தார் .மேலும் பள்ளி கல்லூரி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்படவில்லை, உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக செயல்படுகிறார். ஆசிரியர்களை மிரட்டு நோக்கத்துடன் செயல் படுபவதை கைவிட வேண்டும் என கூறினார்.
இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் சூறையாடப்படுகின்றது. அதை கிறிஸ்தவர்கள் நடந்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் யாரும் கண்டு கொள்வதில்லை. தற்போது அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இதற்க்கு அமைச்சர் பொறுப்பேற்பாரா என கேள்வி எழுப்பினார்.
சபாநாயகர் ஆவுடையப்பன் அனைத்து மதத்தினருக்கும் அனைத்து சமுதாயத்தில் இருக்கும் பொதுவானவர். இவர் கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மற்ற மதத்தினரை படிப்பறிவு இல்லாதவர்கள் என கூறுவது நல்லதல்ல. சபாநாயகர் ஆவுடையப்பன் மதமாறி இருக்கலாம். அதற்காக மற்ற மதத்தினரை தவறாக பேசக்கூடாது. பொதுவானராக இருக்க வேண்டும் நீங்கள் இதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் சபாநாயகர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கருப்புக்கொடி காட்டுவோம் என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். அதேபோல் தமிழக முதல்வரும் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து கூறுவதில்லை. அதனால்தான் இந்த அரசை இந்து விரோத அரசு என நாங்கள் கூறுகிறோம் எனக் கூறினார்.
தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி, இந்து அமைப்புகள் நடத்துகின்ற நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுப்பது தடை விதிப்பது நல்லதல்ல. எங்களுடைய கருத்துரிமை பேச்சுரிமை பறிக்கக் கூடாது .எங்கள் மீது தடைகள் விதிப்பதை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்வோம். எங்களுடைய தேசியக் கொள்கை எடுத்துச் சொல்வோம்.தமிழகத்தில் வெகு சீக்கிரத்தில் மாற்றங்கள் வரும் என பேசினார்.