
குற்றாலம் மெயில் அருவியில் இன்று மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில். குளித்துக்கொண்டிருந்தவர்களில் 3 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.இருவர் பலியாகியுள்ளனர்.மேலும் சிலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இதனால் சீசன் களை கட்டியுள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், குற்றாலம் மெயில் அருவியில் இன்று மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென அருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டியதால், குளித்துக்கொண்டிருந்தவர்களில் 3 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனடியாக மீட்புக்குழுவினர் மீட்பு பணியை தொடங்கினர். 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
கேரளா தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்குஏற்பட்டது.குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 2 பெண்கள் உயிரிழந்தவர்கள் கடலூர் மற்றும் சென்னையை சேர்ந்த இருவர் பலிஎன கூறப்படுகிறது. மேலும் மூவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.