- Ads -
Home சற்றுமுன் ஆடி அமாவாசை குற்றால அருவிகளில் குளிக்க தடை …

ஆடி அமாவாசை குற்றால அருவிகளில் குளிக்க தடை …

குற்றாலம் அருவிகளில் இன்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருவர் பலியான சம்பவம் நிகழ்ந்த நிலையில் வியாழக்கிழமை அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.சுற்றுலா பயணிகள் வியாழக்கிழமை ஆடி அமாவாசை க்கு குற்றாலம் வருவதை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்தது.இதனால் குற்றாலம் மெயின் அருவியில் திடீர் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அருவியிலா குளித்துக்கொண்டிருந்த 5 பேர்களை வெள்ளம் இழுத்துச் சென்றது.

தகவல் அறிந்த தென்காசி மாவட்ட கலெக்டர், ஆகாஷ், எஸ்பி ஆர்.கிருஷ்ணராஜ் அருவிப்பகுதிக்கு விரைந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்கள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ALSO READ:  பொதிகை ரயிலை கவிழ்க்க முயற்சி: சட்டீஸ்கர் மாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது; விசாரணை!

இதுவரை பலியான சென்னை பெரம்பூர் மற்றும் பண்ருட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் உடல் மீட்கப்பட்டுள்ளது மேலும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் குற்றாலம் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வியாழக்கிழமை ஆடி அமாவாசை க்கு மிக அதிகமான பக்தர்கள் வருவார்கள்.அருவிகளில்வெள்ளப்பெருக்கால் வியாழக்கிழமை குளிக்க தர்பணம் செய்ய தடைவிதித்தது மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் குற்றாலத்தில் இருவர்பலியான சம்பவம் குற்றாலத்தில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பலி:  3 பேர் உயிருடன் மீட்பு!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இன்று மாலை பெய்த கன மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவிகளில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.
இதில் மல்லிகா,  கலாவதி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டபோது மீட்கப்பட்டது.5 பேர்  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ‘ரூட் தல’ ஒரு கெத்தா?! அது சினிமா உருவாக்கிய வெத்து!
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version