
கோல்கட்டாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர், பார்த்தா சாட்டர்ஜியை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு நியமனத்தில் நடந்த மோசடி தொடர்பாக அம்மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், தற்போது தொழில்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சார்ட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், பார்த்தா சாட்டர்ஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜியை பலரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், கோல்கட்டாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர், பார்த்தா சாட்டர்ஜியை பதவி நீக்கம் செய்யப்பட்டார்.