
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உற்சவத்தில் வியாழக்கிழமை பெரியாழ்வார் மங்களாசாசனம் சிறப்பாக நடைபெற்றது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் தேர் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக துவங்கியது இதனை தொடர்ந்து ஆண்டாளும் ரெங்கமன்னார் காலை இரவு வேளைகளில் வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் ஏராளமான வெளியூர் வெளி மாநில பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் இந்த நிலையில் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவின் ஐந்தாம் நாளான ஜூலை 28-ம் தேதி காலை 10 மணிக்கு பெரியாழ்வார் மங்கள சாசனம் எனும் நிகழ்ச்சி சிறப்பாக ஆடிப்பூர பந்தலில்வைத்து நடைபெற்றது .
இதில் ஆண்டாளை கண்டெடுத்த பெரியாழ்வார் சன்னதியில் இருந்து சர்வ அலங்கரத்துடன் புறப்பட்டு பந்தலுக்கு வர அங்கு பெரிய பெருமாள் சுந்தர்ராஜ பெருமாள் சீனிவாச பெருமாள் திருத்தங்கல் அப்பன் ஆண்டாள் ரெங்கமன்னார் தம்பதிகள் எதிர்கொண்டு அழைத்து மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி சுமார் ஒரு மணி நேரம் சிறப்பாக நடைபெற்றது .
பெரியாழ்வார் அன்ன வாகனத்திலும் மற்ற பெருமாள்கள் கருட வாகனத்திலும் ஆண்டாள் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருள்ள அப்போது பிரபந்தம் பாசுரப்பாடல்கள் இசைக்கப்பட்டது அப்போது திரண்டுருந்த பக்தர்கள் கோபாலா கோவிந்தா என விண் அதிர கோசமிட்டனர் இதனை தொடர்ந்து இன்று இரவு 10 மணிக்கு 5 பெருமாள் ஒன்று சேர ஐந்து கருட சேவை என்னும் நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறும்.இதற்காகஐந்துபெருமாளும் ஆண்டாள் சன்னிதிக்கு வருகைதந்தனர்.கருடசேவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்புத்தூரில் குழுமியிருந்தனர்.







பெரிய ஆழ்வார் மங்கள சாசனம் ஐந்து கருட சேவை நிகழ்ச்சியின் பூஜைகளை கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் தலைமையில் ஸ்தானிகம் ரெங்கராஜன் என்ற ரமேஷ் வேதபிரான் சுதர்சன் கிச்சப்பன் வெங்கடேச பட்டர் கோயில் மணியம் கோபி ஆகியோர் செய்தனர் ஆண்டாள் ஆடிப்பூர திருவிழாவில் மங்கள சாசனம் மற்றும் கருட சேவை நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லதுரை கோவில் தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்து உள்ளனர்
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா மக்கள் பங்கேற்பின் மூலம் நடைபெறவில்லை இந்த ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவதால் ஏராளமான வெளியூர் வெளிமாநில பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்ற நிலையில் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு சகல வசதிகளும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது