சதுரகிரி மலையில் திடிரென்று பெய்த மழை பக்தர்கள் அவதி…

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

1737560 sathuragiri - 2026

சதுரகிரி மலையில் திடிரென்று பெய்த மழையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைப்பாதைகளில் சிக்கும் நிலை ஏற்பட்டது.பக்தர்கள் ஆற்றை கடக்க முடியாமல் தவித்ததால் கயிறு கட்டி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சதுரகிரி மலையில் இரவு மழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைப்பாைதகளில் தீயணைப்பு வனத்துறையினர், போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 3 மணியுடன் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் சாமி தரிசனம் செய்ய சென்றவர்கள் தொடர்ந்து அடிவாரத்துக்கு வந்து கொண்டிருந்தனர். இதே போல் வருசநாட்டு மலைப்பகுதியிலும் ஏராளமான பக்தர்கள் பயன்படுத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு சதுரகிரி மலைப்பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதனால் அடிவாரத்திற்கு இறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் ஒதுங்கக்கூட இடமில்லாமல் தவித்தனர். தொடர் மழை காரணமாக அங்குள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடைகளில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பக்தர்கள் அந்தப்பகுதிகளை கடக்க முடியாமல் அங்கேயே தடுத்து நிறுத்தப்படட்னர். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பலமணி நேரம் ஒரே இடத்தில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

நள்ளிரவு நேரத்தில் ஓடைகளில் தண்ணீர் சற்று குறைந்தவுடன் வனத்துறை, தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பக்தர்களை அங்கிருந்து பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். மழை பெய்ததால் பல இடங்களில் சேறும், சகதியுமாக காணப்பட்டது. கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் இருந்து கீழே இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீர் கனமழையால் மலைப்பாதைகளில் சிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் கடும் அவதியடைந்தனர். இன்று காலையும் சதுரகிரி செல்ல தாணிப்பாறை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். ஆனால் மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருந்ததால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. காலை 9 மணிக்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

Related articles

Recent articles

spot_img