சுசீந்திரம் கோவிலில் நிறை புத்தரிசி விழா ஆக 4-ந்தேதி நடைபெறுகிறது சுசீந்திரம் ஸ்ரீகொன்றையடி சாமிக்கும் பின்னர் தாணு மாலயசாமிக்கும் பூஜை பூஜைகள் நடைபெறும்.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் நிறை புத்தரிசி நிகழ்ச்சி வருடந் தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகின்ற 4-ந்தேதி வியாழக்கிழமை அதிகாலையில் சுசீந்திரம் ஸ்ரீகொன்றையடி சாமிக்கும் பின்னர் தாணு மாலயசாமிக்கும் பூஜை நடைபெறும். தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து பயிர் கட்டுக்கள் சாமி சன்னதியில் இருந்து சன்னதி தெரு வழியாக எடுத்து வரப்பட்டு அதன் பிறகு சாமி சன்னதியில் வைத்து காலை 6 மணிக்கு சிறப்புப் பூஜை நடைபெறும்.
அதைத்தொடர்ந்து சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள், விவசாயிகளுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்குவார்கள். இதனால் அப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள் செழித்து வாழ்வார்கள் என்பது ஐதீகம். ஆகையால் அன்றைய தினம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தப் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.
