சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கிராமத்தில் உள்ள வயலில் காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் அய்யங்காளை(45). இவரது மகன்கள் அஜித் (21) ராணுவத்தில் பணிபுரிகிறார். இவருக்கு 10 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.இவர் பார்ப்பதற்காக விடுப்பில் வந்துள்ளார். இவரது சகோதரர் சுதந்திரபாண்டி (20 ).இவர் போலீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு மூவரும் முயல் வேட்டைக்கு திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கிராமத்தில் முத்து கருப்பு என்பவர் வயல் வழியாக முயல் வேட்டைக்கு சென்றனர்.அப்போது வயலில் காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி 3 பேரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு ஆர்டிஓ. தாசில்தார், டிஎஸ் பி உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இது குறித்து பழையனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
