

இராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடத்திட்டத்திற்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடாததால் விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளது.
இராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது தெருக்களில் பணிகள் நிறைவுற்ற நிலையில் முக்கிய சாலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் தெற்கு காவல் நிலையம் அருகே சேத்தூர் சேவுக பாண்டியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் பாதையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் சரியாக மூடாமல் பள்ளம் ஏற்பட்டுள்ளது இதனால் அதை கடந்து செல்லும் மாணவிகள் தவறுகளும் அபாயம் உள்ளது வாகன ஓட்டிகளும் கீழே விழுந்தே செல்கின்ற சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் பணியை சரிவர செய்யவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர் . நகராட்சி நிர்வாகம் இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட்டவுடன் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்