Homeசற்றுமுன்உத்தரகாண்ட் மாநிலத்தில் 500பள்ளிகளின் நிலமை.. அதிகாரிகள் அதிர்ச்சி

உத்தரகாண்ட் மாநிலத்தில் 500பள்ளிகளின் நிலமை.. அதிகாரிகள் அதிர்ச்சி

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜமத்ரா மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் விடுமுறை தினம் ஞாயிறுக்கு பதிலாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுவது கடந்த மாதம் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையில் வசித்து வரும் பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் விடுமுறை தினம் ஞாயிறுக்கு பதில் வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகளில் உருது மொழி சேர்க்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் காலை செய்யும் இறைவழிபாட்டு முறையும் மாற்றப்பட்டுள்ளது. வழக்கமாக கைகளை கூப்பி வணங்கி இறைவழிபாடு செய்யும் முறை கடைபிடிக்கப்பட்ட நிலையில் அந்த முறையில் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவ-மாணவிகள் இஸ்லாமிய மதத்தினர் பின்பற்றும் வழிபாட்டு முறையான கைகளை மடக்கி தலையை குணிந்து காலை இறைவழிபாடு செய்யும் முறையை பின்பற்றி வந்துள்ளனர். இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் இந்த மாற்றங்கள் மாநில அரசின் கவனத்திற்கு செல்லமாலேயே அரங்கேறியுள்ளது.

உருது பள்ளி என பெயர் மாற்றம்; ஒன்று, இரண்டல்ல 500 பள்ளிகள் – அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்..

உள்ளூர் அரசியல்வாதிகள், இஸ்லாமிய மத போதகர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோரின் அழுத்தத்தால் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்த மாற்றம் ஜமத்ரா மாவட்டத்தை போன்றே அம்மாநிலத்தின் ராம்ஹரா, ஹர்வா, டும்கா, டியொஹர், கட்டா, கிரிடிஹா, பலமும்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் உருது சேர்க்கப்பட்டுள்ளது. வார விடுமுறை ஞாயிறுக்கு பதில் இஸ்லாமிய மத மாணவ-மாணைவிகள் இறைவழிபாடு நடத்துவதற்கு ஏதுவாக வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது மாநில அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு மாநில கல்வித்துறை கடந்த 2-ம் தேதி எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. அதில், உரிய அனுமதியின்றி 407 பள்ளிகளில் அனுமதியின்றி உருது மொழி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், 509 பள்ளிகளில் விடுமுறை நாள் ஞாயிறுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக மாநில கல்வித்துறை பதில் அளித்துள்ளது.

இந்த ஆய்வை தொடர்ந்து அனுமதியின்றி உருது மொழி சேர்க்கப்பட்ட 407 பள்ளிகளில் 307 பள்ளிகளில் உருது மொழி நீக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து வந்த 509 பள்ளிகளில் 459 பள்ளிகளில் மீண்டும் விடுமுறை தினம் ஞாயிற்றுக்கிழமையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. எஞ்சிய பள்ளிகளிலும் பழைய நிலையே தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் உரிய அனுமதியின்றி விடுமுறை நாள் மாற்றம், காலை இறைவழிபாடு முறை மாற்றம், உருது மொழி சேர்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்பட இந்த செயலில் தொடர்புடைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனாதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரியாக ஹெமந்த் சோரன் முதல்-மந்தியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
school open265220m1 - Dhinasari Tamil

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,076FansLike
380FollowersFollow
79FollowersFollow
74FollowersFollow
4,169FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

இந்த நூற்றாண்டின் இசைமேதை கண்டசாலா: நூற்றாண்டு விழாவில் வெங்கய்ய நாயுடு புகழாரம்!

மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா பிரதர்ஷினி நடத்திய இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா

வயதானவர்களின் வலியைச் சொல்லும் Hi 5 – பட இசை வெளியீட்டு விழா!

இன்று உலகம் முழுக்கவே வயதானவர்களை பார்த்து கொள்ள  ஆளில்லை என்ற பிரச்சனை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் அதைப்பற்றி பேசுவது

‘விடுதலை’ படப்பிடிப்பின்போது விபத்து: சண்டை பயிற்சியாளர் பலி..

வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பின்போது விபத்து: சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில்...

காலங்களில் அவள் வசந்தம் -திரைப்படம் ஒரு பார்வை..

அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தத் இயக்கியுள்ள படம்காலங்களில் அவள் வசந்தம். படக்குழுவினரை சரியாக பயன்படுத்தியுள்ளார்....

Latest News : Read Now...

Translate »
Exit mobile version