ஒன்பது வயது மாற்றுத்திறனாளி குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் தந்தைக்கு ஆயுள் தண்டனை திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒன்பது வயது மாற்றுத்திறனாளி குழந்தை கொலை வழக்கில் தாய் தந்தைக்கு ஆயுள்தண்டனை வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் வசிப்பவர் முனீஸ்வரன் (46) இவர் தனியார் கம்பெனி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேவதி வயது (38) இவர் ஒரு கல்லூரி பேராசிரியர் ஆவார். இவர்களுக்கு 9 வயதில் மாற்றுத்திறனாளி குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தைக்கு பல இடங்களில் மருத்துவம் பார்த்து குணமடையவில்லை. இதனால் விரக்தி அடைந்த கணவன் மனைவி இருவரும் தனது குழந்தையை ஒரு கோயிலில் வைத்து விஷம் கொடுத்துள்ளனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி கணவன் மனைவி இருவரையும் கைது செய்தனர் இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கிய மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தாய் தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.3500 அபராதம்விதித்து தீர்ப்பளித்தார்