Homeசற்றுமுன்44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா..

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா..

500x300 1743766 mkss1 - Dhinasari Tamil

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது சென்னையை மறந்துவிட வேண்டாம்; உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன் என வெளிநாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து‌பேசினார்.

இந்த விழாவில், 600 கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. 44வது சர்வதேச சதுரங்க போட்டியை நடத்தும் வாய்ப்பு முதல் முறையாக இந்தியாவுக்கு கிடைத்தது. அதனை நடத்தும் பொறுப்பை தமிழகம் ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார்.

16600565983079 - Dhinasari Tamil

இந்த போட்டியை நடத்த சென்னை அடுத்த மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது. போட்டிக்காக உடனடியாக ரூ.100 கோடியையும் முதல்வர் ஒதுக்கினார். 186 நாடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டியை உலக நாடுகளே வியக்கும் வகையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலினே தலைமை ஏற்று நடத்தி வந்தார்.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரமாண்ட தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 28ம் தேதி நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில், அனைவரும் வியக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தமிழ்மொழி, தமிழர்கள், தமிழ்நாட்டின் சிறப்பை விளக்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை எடுத்துரைக்கும் காட்சிகள் இடம் பெற்றன.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 29ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கியது. இதற்காக 52 ஆயிரம் சதுர அடி, 22 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த போட்டிகளில் இந்தியா உள்பட 186 நாடுகளின் வீரர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இந்திய வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இறுதி போட்டி வரை முன்னேறி உள்ளனர். கடந்த 12 நாட்களாக சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மாலையுடன் நிறைவுபெற்றது.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.  சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக இந்திய அணி ஆலோசகர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர், 44வது சர்வதேச சதுரங்க போட்டி இயக்குநர் பாரத்சிங் சௌஹான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிறைவு விழா நடைபெறும், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக கண்கவர் கலைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

837507 - Dhinasari Tamil

நிறைவு விழா நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சி முடிந்ததும், வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு மற்றும் கேடயம் வழங்குகி பேசினார்.

அவர் பேசியதாவது தமிழகத்தை விளையாட்டில் சிறந்த மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடத்த மூன்றே மாதங்களில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டோம் இதற்காக 102 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சிறந்த முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை சிறப்பாக செய்த தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அனைத்து அதிகாரிகளையும் பாராட்டுகிறேன் .விரைவில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தனி மைதானங்கள் அமைக்கவும் தமிழகத்தில் விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் .அவர் பேசியபோது யாதும் ஊரே யாவரும் கேளிர் என குறிப்பிட்டு தனது பேச்சை துவக்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது . மேலும் மு.க.ஸ்டாலின் பேசியபோது ஆசிய கடற்கரை போட்டிகளை தமிழகத்தில் நடந்த தேவையான ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார் .

அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட்டிற்கு பின் விளையாட்டுத்துறை முன்பை விட அதிக பாய்ச்சலுடன் செல்லும். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றை சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வெளிநாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து பாராட்டி வருகின்றனர். சென்னையை மறந்துவிட வேண்டாம்; உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன் என வெளிநாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்

814969 state 08 1 - Dhinasari Tamil

இந்த செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் வண்ணமயமான ஒளி, ஒலி அமைப்புகளைக் கொண்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் மாபெறும் வீரர்கள் ஆற்றிய பங்கை விளக்கும் வகையில் ‘தமிழ் மண்’ என்ற பெயரில் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசனின் பின்னனி குரலில் தமிழர்களின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவிலும் அதே போன்ற கண்கவர் ஒலி, ஒளி காட்சி அமைப்புகளுடன் தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறு, கமல்ஹாசனின் பின்னனி குரலுடன் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1743764 prag1 - Dhinasari Tamil

பதக்கம் பெற்ற வீரர்களுக்கு விருது அளிக்கும் விழா வில் 3வது போர்டில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது அக்கா வைஷாலி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. அக்காவும் தம்பியும் ஒன்றாக சேர்ந்து விருது வென்றது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
75FollowersFollow
74FollowersFollow
3,950FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பொன்னியின் செல்வன்-3 நாட்களில் ரூ.200 கோடி வசூல் ..

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு வசூலில் கலக்கும் பொன்னியின் செல்வன் ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்30இல்  வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

Latest News : Read Now...