இந்தியா வின் 14ஆவது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர்(71) இன்று பதவியேற்றுக் கொண்டார்.அவருக்குகுடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் நிறைவடையவிருந்த நிலையில், 14ஆவது குடியரசு துணைத் தலைவருக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜகதீப் தன்கருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற ஜகதீப் தன்கர், மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.