
மேட்டூரில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட தேசிய கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மேட்டூரில் 600 அடி நீளம் 9 அடி அகலம் கொண்ட தேசியக்கொடி உருவாக்கப்பட்டது. இந்த தேசிய கொடியினை மேட்டூர் சார் ஆட்சி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், வருவாய்த்துறை, காவல்துறை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தேசியக்கொடிமை கையில் ஏந்தி ஊர்வலமாக நடந்து சென்றனர். இந்த ஊர்வலமானது சாரா ஆட்சி அலுவலகத்தில் தொடங்கி மேட்டூர் பேருந்து நிலையம், காந்தி சிலை, சின்ன பார்க், நான்கு ரோடு வழியாக சென்று மீண்டும் சார் ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது.
ள்ள
தேசப்பற்றும் தேசியக்கொடியைப் பற்றிய விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த ஊர்வலம் நடைபெற்றது என ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் வீர் பிரதாப் சிங் , எம் எல் ஏ, சதாசிவம் ,மேட்டூர் நகர மன்ற துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார் உள்ளிட்ட 1000 – கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.