
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். இதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தேநீா் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை, ஆளுநா் ஆா்.என்.ரவி வரவேற்றாா். அப்போது, ஆளுநருக்கு மகாத்மா காந்தியடிகள் சிலையை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.
தேநீா் விருந்து நிகழ்ச்சியில் சுமாா் 45 நிமிடங்களுக்கு முன்பாகவே ஓ.பன்னீா்செல்வம் வந்தாா். அவா் தனது ஆதரவாளா்களுடன் ஆளுநா் ஆா்.என்.ரவியுடன் சிறிது நேரம் ஆலோசித்தாா்.
பரிசு – பாராட்டு: சுதந்திர தினத்தை மையப்படுத்தி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டிகளை ஆளுநா் மாளிகை நடத்தியது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா். மாலை 5 மணியளவில் தொடங்கிய தேநீா் விருந்து நிகழ்ச்சி, ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.