
கேரளாவில் ஜெயிலில் இருக்கும் தந்தையை ஜாமீனில் எடுக்க மாணவியின் தாயார் முயற்சி மேற்கொண்ட போது பாதுகாப்புக்கு இருந்த தந்தையின் நண்பர்களே பிளஸ்டூ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர், புன்னயூர்குளம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக வகுப்பில் சோகமாக அமர்ந்து இருந்தார். இதுபற்றி வகுப்பாசிரியை கேட்டபோது அவர் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து ஆசிரியை அந்த மாணவியை டாக்டரிடம் அழைத்து சென்றார். மாணவியை பரிசோதித்தபோது, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஆசிரியை குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு: மாணவியின் தந்தை அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதற்காக அவரை போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் இருக்கும் தந்தையை ஜாமீனில் எடுக்க மாணவியின் தாயார் முயற்சி மேற்கொண்டார். இதற்காக அவர் மலப்புரம் கோர்ட்டில் மனு செய்தார். இதற்காக அவர் அடிக்கடி மலப்புரம் கோர்ட்டுக்கு செல்ல வேண்டியது இருந்தது.
அப்போது கணவரின் நண்பர்கள் 3 பேரிடம், வீட்டில் தனியாக இருக்கும் மகளை கவனித்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். பிளஸ் 2 மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த 3 பேரும், அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவரை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை வெளியே கூறினால், கொன்று விடுவதாக மிரட்டி அடிக்கடி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். இதில்தான் மாணவிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் நல அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர். அவர்கள் இதுபற்றி போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாணவியின் தந்தையின் நண்பர் ஷாஜி ( 26) என்பவர் கைது செய்யப்பட்டார்.
மற்ற இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். தந்தையின் நண்பர்களே மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.