
இராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் திருமணமான மகி கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம்பெண் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்றல் நகர் அருகே உள்ள ரோஜா நகர் பகுதியில் சேர்ந்த ராமலிங்கம் பூமாரி தம்பதியின் மகள்
தர்மாதேவி வயது 28 இவருக்கும் சோமையபுரம் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் என்பவருக்கும் திருமணம் ஆகிய இருவரும் ஓராண்டு மட்டுமே சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தனிமையில் இருந்த தர்மதேவி நேற்று வீட்டில் ஆள் இல்லாத பொழுது அரளி விதை அரைத்து குடித்துவிட்டு வீட்டில் கிடந்துள்ளார் .
உறவினர்கள் உடனே
இராஜபாளையம் அரசு மருத்துவமனை கொண்டு சென்ற பொழுது பரிசோதனை மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்து.
இன்று சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி .மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு அதன் பின் உடற்கூறு ஆய்வு செய்து உடலை
பெற்றோரிடம் ஒப்படைத்தனர் .
தர்மா தேவியும் சீதாராமனும் கடந்தி சில தினங்களுக்கு முன் சந்தித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது அந்த பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.