பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் ராஜிநாமாவை தொடா்ந்து, புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலில் வெளியுறவு அமைச்சா் லிஸ் டிரஸ்ஸும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக்கும் போட்டியிட்டனா். இதற்கான வாக்குப் பதிவு செப். 2-ஆம் தேதி நிறைவடைந்தது.
பிரிட்டனின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லிஸ் ட்ரஸை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.