தென்காசி ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி-தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு இரயில் சேவை(06003/06004) 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி, ஆயுதபூஜை,காந்தி ஜெயந்தி மற்றும் பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு இந்த சிறப்பு ரயில் சேவையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தலாம்.நவம்பர் முதல் ஜனவரி 20வரை நிகழும் சபரிமலை சீசனுக்கு இந்த ரயிலை தென்காசி வரை பக்தர்கள் பயன்படுத்தலாம்.
முன்பதிவு 08-செப்-22 காலை 08:00 மணிக்கு துவங்கும் என
தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.இந்த ரயிலை தொடர்ந்து நீடித்ததற்கு பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.