கேரளாவில் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி, 5 நாட்களில் 324 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி, 5 நாட்களில் 324 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளது. கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணம், விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் இருந்தே மது வகைகளை, மது பிரியர்கள் வாங்கி குவிக்கத் தொடங்கினர். இந்நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதியில் இருந்து 4 ஆம் தேதி வரை 324 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளதாக கேரள மாநில மதுபான கழகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 248 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 30 விழுக்காடு கூடுதலாக விற்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓணம் பண்டிகைக்கு மொத்தமாக 700 கோடி ரூபாய் விற்பனையை எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.