விடுமுறை தினத்தில் திருவண்ணாமலை கிரிவலம் பக்தர்கள் வருகை அதிகரிப்பு..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

விடுமுறை தினத்தில் திருவண்ணாமலை கிரிவலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பௌர்ணமி மட்டுமின்றி விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த மாதத்திற்கான பௌர்ணமி நேற்று மாலை 6.25 மணியளவில் தொடங்கியது. இதனால் நேற்று மாலை சுமார் 5 மணியில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், அருணாசலேஸ்வரர் கோவிலிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இரவு 7 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பௌர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பௌர்ணமி இன்று மாலை 4.35 மணி வரை இருந்ததால் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
images 73 - 2026

Related articles

Recent articles

spot_img