Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்டீக்கடைக்குள் புகுந்த லாரியால் 3 பேர் பலி..

டீக்கடைக்குள் புகுந்த லாரியால் 3 பேர் பலி..

To Read in Indian languages…

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் கிரிப்ஹர் பகுதியில் டீக்கடைக்குள் புகுந்து லாரி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் கிரிப்ஹர் பகுதியில் டீக்கடை உள்ளது. அயோத்தியா – பிரயாக்ராஜ் இடையேயான நெடுஞ்சாலை அருகே இந்த டீக்கடை அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த டீக்கடையில் இன்று வாடிக்கையாளர்கள் சிலர் டீ குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் டீக்கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 8 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Follow us on Social Media

19,023FansLike
389FollowersFollow
84FollowersFollow
0FollowersFollow
4,767FollowersFollow
17,300SubscribersSubscribe