மயிலாடுதுறை – திண்டுக்கல் தினசரி ரயில் மற்றும் செங்கோட்டை – மதுரை தினசரி ரயிலை ஒன்றாக இணைத்து மயிலாடுதுறை – செங்கோட்டை ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய தஞ்சை டெல்டா ஊர்ளுடன் சிவகாசி, இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டைக்கு நேரடி ரயில் வசதியை ரயில்வேத்துறை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை – திண்டுக்கல் விரைவு ரயில் பொதுப் பெட்டிகளுடன் செங்கோட்டை வரை விரைவில் நீட்டிக்கப்பட உள்ளது.இந்த ரயில்கள் இணைப்பு மூலம் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் நகரங்களான மயிலாடுதுறை கும்பகோணம் மற்றும் தஞ்சை பகுதியிலிருந்து சிவகாசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு நேரடி ரயில் வசதி மீண்டும் கிடைத்துள்ளது.
16847 மயிலாடுதுறை – செங்கோட்டை விரைவு ரயில் மயிலாடுதுறையில் காலை 11:25 க்கு புறப்பட்டு திண்டுக்கல்க்கு மாலை 4.20 க்கு வந்து அங்கிருந்து மதுரை வரும்.மதுரையில் வழக்கம் போல் மதுரை செங்கோட்டை புறப்படும் நேரமான மாலை 5.25க்கு புறப்பட்டு
ராஜபாளையம் வருகை: 07:02க்கும்
செங்கோட்டை வருகை: இரவு 9.25க்கும்இருக்கும்.
16848 செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயில் செங்கோட்டை மில் காலை 7.00 க்கு புறப்பட்டு ராஜபாளையத்திற்கு காலை 08:22க்கு வந்து மதுரை க்கு காலை 10.35 செல்லும்
திண்டுக்கல்லுக்கு மதியம் 12.10,
மயிலாடுதுறை மாலை 5.20சென்றடையும்.
இயங்கும் தேதி, நேர அட்டவணை மற்றும் பெட்டிகள் தொடர்பான முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.