தங்கம் மூன்று நாட்களாக விலை சரிவை நன்கு வரும் நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.4,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.61.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் சற்று ஏற்றுத்துடன் விற்பனையானது.
சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37,888-க்கும், கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,736-க்கும் விற்பனையானது. அதன் பின் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே விற்பனையானது.இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக கடந்த சனிக்கிழமையன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை திடீர் குறைவை கண்டு விற்பனை செய்யப்பட்டது. அதாவது சவரன் ரூ.224 குறைந்து ரூ.37,920-க்கும், கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.4,740-க்கும் விற்கப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதுமட்டுமின்றி இவ்வாரத்தின் முதல் 2 தினங்களில் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரன் ரூ.192 குறைந்து ரூ.37,608-க்கும், கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.4,701-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது.
இன்று மக்களை மேலும் மகிழ்விக்கும் வகையில் தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37,440-க்கும், கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.4,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.61.10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை சரிந்திருப்பது இல்லத்தரசிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.