தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் பள்ளியிலும் தீண்டாமையா? அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளத்தில் பட்டியலின மாணவர்கள் பள்ளியிலும் தீண்டாமைக் கொடுமையை சந்திப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஞ்சாங்குளத்தில் பெட்டிக்கடை உரிமையாளர் பட்டியலின மாணவர்களிடம் பேசும் விடியோ வெளியாகி வைரலானது. இதனையடுத்து, மாணவர்களிடம் தீண்டாமை உணர்வை வெளிப்படுத்திய அந்தப் பெட்டிக்கடைக்காரர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 3 பேர் மீது காவல் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பெட்டிக்கடை சீல் வைக்கப்பட்டது
இந்நிலையில், தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும் தீண்டாமை கொடுமை நடப்பதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருக்கையில் அமர்வது, உணவுக்கு தட்டு வழங்குவது போன்றவற்றில் தீண்டாமை இருப்பதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தத் தீண்டாமைக் கொடுமைகளை ஆசிரியர்கள் கண்டுகொள்வதில்லை என்றும் மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

