
கடந்த 2020ம் ஆண்டு சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சாகும்வரை சிறையிலிருந்து கழிக்கவேண்டும் என தண்டனை வழங்கப்பட்டது
சிவகாசி அருகே கொங்கலாபுரத்தை சேர்ந்த சுந்தரம்-பத்மா தம்பதியினரின் 8 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்ற நிலையில் மறுநாள் காட்டுபகுதியில் சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது
இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் அருகில் உள்ள நூல் பை தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றிய மஜம் அலி என்ற அஸ்ஸாம் மாநில தொழிலாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது
கைது செய்யப்பட்ட மஜம் அலி மீது கொலை வழக்கு (302),ஆள் கடத்தல், போஸ்கோ, உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்ஸோ குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை இன்று சாகும் வரை சிறையில் இருந்து கழிக்க வேண்டும் என வழங்கப்பட்டது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்ஸோ குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி பூர்ணா ஜெயானந்த் பழகினார்