டெல்லியில் சாலையில் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியின் சீமாபுரி பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது நேற்றிரவு சிலர் தூங்கியுள்ளனர்.இந்நிலையில், நள்ளிரவு 1.51 மணியளவில் அவ்வழியே அதிவேகமாக சென்ற லாரி ஒன்று மின் கம்பத்தில் மோதி, தடுப்புச் சுவர் மீது தூங்கிய 6 பேர் மீது ஏறியுள்ளது.இதில், ஒரு இளைஞர் உள்பட 4 பேர் பலியான நிலையில், 16 வயது சிறுவன் உள்பட இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தில்லி போக்குவரத்து கழக பணிமனையில் அருகே விபத்தை ஏற்படுத்திய லாரி டிஎல்எஃப் நோக்கி நிற்காமல் சென்றுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும், அடையாளம் தெரியாத லாரி ஓட்டுநர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
