மும்பையில் ரூ.1,752 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்..

Published:

container lorry - 2026

மும்பை: மும்பையின் நவ சேவா துறைமுகத்தில் இருந்த கண்டெய்னரில் ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹெராயின் கடத்தலைக் கண்டுபிடிக்காமல் இருக்க, அதிமதுரக் குச்சிகளில் ஹெராயின் பூசப்பட்டு கண்டெய்னரில் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தில்லி காவல்துறைக்குக் கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் மும்பை நவசேவா துறைமுகத்தில் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு காவலர்கள் இன்று சோதனை நடத்தினர்.

அப்போது, மும்பை துறைமுகத்தில் இருந்த ஒரு கண்டெய்னர் லர்ரியில், சந்தை மதிப்பில் ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ எடை கொண்ட ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னர் பெட்டகத்துக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img