
இமயமலையில் இருந்து வால்பாறைக்கு அதிகளவில் வந்துள்ளன சாம்பல் நிற வாலாட்டி குருவிகள்.
இமயமலையில் இருந்து வால்பாறைக்கு வந்த சாம்பல் நிற வாலாட்டி குருவிகள் வால்பாறை பகுதியில் வெயில் நிலவுவதால், சாம்பல் நிற வாலாட்டி குருவிகளின் வருகை அதிகரித்துள்ளது.
வாலாட்டி குருவிகள் சிறு பறவை இனத்தை சேர்ந்தவை. இந்த குருவி 18 முதல் 19 செ.மீ. நீளம் கொண்டது. பொள்ளாச்சி: குருவி இனங்களில் ஒன்றான வாலாட்டி குருவிகள் வெள்ளை, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறங்களில் காணப்படும். இதில் வெள்ளை நிற வாலாட்டி குருவிகள், தென்னிந்திய மலைப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் காணப்படுகின்றன. ஆனால் மஞ்சள் மற்றும் சாம்பல் நிற வாலாட்டி குருவிகள், குளிர்காலத்தில் மட்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணப்படும். இமயமலையில் காணப்படும் மஞ்சள், சாம்பல் நிற வாலாட்டி குருவிகள் அங்கு நிலவும் கடுமையான பனிப்பொழிவு, குளிர் ஆகியவற்றின் காரணமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாத இறுதியில் வலசை செல்ல தொடங்கும்.
செப்டம்பர் மாதத்தில் தென்னிந்தியா மற்றும் இலங்கையை அடைகிறது. 8 மாதங்கள் தென் இந்தியா மற்றும் இலங்கை பகுதிகளில் தங்கி இருந்த பின்னர் மீண்டும் இடம் பெயர்ந்து ஏப்ரல் மாதத்தில் இமயமலைக்கு திரும்புவது வழக்கம். தற்போது பருவமழைக்கு பின்னர் வால்பாறை பகுதியில் வெயில் நிலவுவதால், சாம்பல் நிற வாலாட்டி குருவிகளின் வருகை அதிகரித்துள்ளது. வாலாட்டி குருவிகள் சிறு பறவை இனத்தை சேர்ந்தவை. இந்த குருவி 18 முதல் 19 செ.மீ. நீளம் கொண்டது.
இப்பறவையின் கழுத்து மற்றும் வால்பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூச்சிகளை உணவாக உண்ணும் இப்பறவைகள், ஏப்ரல் முதல் ஜூலை வரை இனப்பெருக்கம் செய்யும். வேகமாக ஓடும் ஆறு மற்றும் நீரோடை அருகே கூடுகட்டி வாழும் பண்பு கொண்டது.
இனப்பெருக்க காலத்தில் மூன்று முதல் ஆறு முட்டைகள் இடும். பெரிய நீர்நிலைகள், வனப்பகுதியில் பல சிற்றோடைகள் என வனப்பகுதி வளமாக இருப்பதால் வால்பாறைக்கு சாம்பல் நிற வாலாட்டி குருவிகளின் வருகை அதிகரித்துள்ளது. இது வனம் வளமாக இருக்கிறது என்பதற்கான குறியீடாகவே கருத வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.