விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள திருச்சுழி வீரசோழன் தர்மம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா( 70) இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர் .
மேலும் இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது .இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பூரணஜெயஆனந்த் குற்றவாளி கருப்பையாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்