To Read it in other Indian languages…

Home சற்றுமுன் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை கண்டித்து தேனியில் போராட்டம்..

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை கண்டித்து தேனியில் போராட்டம்..

1767485 strg - Dhinasari Tamil

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை கண்டித்து தேனியில் குறவர் இன மக்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரிக்குறவர் நல வாரியத்தில் குறவர் என்பதை நீக்க வேண்டும். அமைச்சரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டத்தை நடத்தினர்.

தேனி அல்லிநகரம் வள்ளிநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் உள்ள திட்ட சாலையில் பந்தல் அமைத்து தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், நரிக்குறவர் நல வாரியத்தில் குறவர் என்பதை நீக்க வேண்டும். குறவர் என்ற எங்கள் இனத்தின் பெயரை பிற சமூகத்தினரின் பெயரோடு இணைத்து பயன்படுத்தக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக வன வேங்கைகள் கட்சி சார்பில் ராஜபாளையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. கட்சியின் நிறுவன தலைவர் இரணியன் இது தொடர்பாக சென்னையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் மனு கொடுக்க சென்ற போது அவரை அமைச்சர் அவமரியாைத செய்துள்ளார்.

இதனால் அமைச்சரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டத்தை நடத்தி வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் அடையாமல் போராட்டம் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.