
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே அங்கு பஜனை பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
சோனியா காந்தியை தொடர்ந்து மாநிலங்களை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மலர்கள்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னையில் காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி, மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் உள்ள காந்தி சிலைக்கு முதலமைச்சர், ஆளுநர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இந்திய தேசத் தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி, மேயர் பிரியா, அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
