பொன்னியின் செல்வன் மிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே மணிரத்னத்தின் இயக்கத்தில் விக்ரம் , கார்த்தி , ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்றவர்களின் நடிப்பில். , லைக்கா தயாரிப்பில் தமிழ் படங்களில் அதிக பொருட் செலவில் வந்திருக்கிறது ஆனால் இது வென்றதா தோற்றதா பார்க்கலாம்?! .

கார்த்தி வந்திய தேவன் ரோலில் பொருத்தமாக இருக்கிறார் ஆனால் அவரை வீரராக கட்டாமல் பெண்கள் பின்னால் சுற்றும் உல்லாசியாக அதிகம் காட்டியது சறுக்கல் . விக்ரம் , ஐஸ்வர்யா ராய் , திரிஷா எல்லோரும் வேடத்துக்கு மிக பொருத்தமாக இருக்கிறார்கள் . சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிப்பு அருமை . ஏ ஆர்.ரகுமானின் இசையில் பொன்னி நதி , சோழா போன்ற பாடல்கள் தாளம் போட வைக்கிறது . பின்னணி இசை படத்திற்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது . தோட்டா தரணியின் கலை நுணுக்கத்தில் எது ஒரிஜினல் , எது டூப்ளிகேட் என்றே தெரியாத அளவிற்கு அவ்வளவு நுட்பம் . கிராபிக்ஸ் காட்சிகளில் சில குறைகள் இருந்தாலும் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி அருமை .
படத்தின் முதல் பாதியில் எந்த பிடிப்பும் இல்லாத திரைக்கதையால் மாறி மாறி ஓலை கொடுத்துக் கொள்வதற்குள்ளேயே இடைவெளி வந்து விடுகிறது . புத்தகம் படிக்காதவர்களுக்கு யார் யார் என்னவென்று புரிவதற்கு உள்ளேயே நேரம் முடிந்து விடும் . பார்வையாளர்களை கட்டிப் போடும் அளவிற்கு எமோஷனல் கனெக்ட் இல்லாதது பெரிய குறை . ஆனாலும் இடைவெளிக்கு பிறகு சில ட்விஸ்ட் வைத்து அடுத்த பாகத்திற்கு ஒரு ஆர்வத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
சில குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் தமிழ் சினிமாவை மட்டுமல்ல இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் படம் நிச்சயமாக குடும்பத்துடன் அனைவரையும் பல வருடங்கள் கழித்து தியேட்டருக்கு வர வைத்திருக்கிறது . நம் தமிழரின் பண்பாட்டை , கலாச்சாரத்தை எந்தவிதமான காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் வெளிப்படையாக சொன்னதற்கு இயக்குனருக்கு ஒரு சல்யூட் .
பொன்னியின் செல்வன் – பொறுத்தார் பூமி ஆள்வார் .
ரேட்டிங் 3 * / 5 *
இந்த படத்தின் வீடியோ விமர்சனத்தை கீழ்க்கண்ட லிங்க் மூலம் காணவும் ….
விமர்சனம் : வாங்க ப்ளாகலாம் அனந்து