
உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹியில் அக்.2ல் நடந்த துர்கா பூஜையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
பதோஹி மாவட்டத்தின் அவுராய் நகரில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அங்குஷ் சோனி (12), ஜெய தேவி (45), நவீன் (10), ஆர்த்தி சௌபே (48) மற்றும் ஹர்ஷ்வர்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மொத்தம் 67 பேர் படுகாயமடைந்த நிலையில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதோஹி மாவட்ட மாஜிஸ்திரேட் கௌரங் ரதி கூறுகையில், தீ விபத்துக்கு குறைந்த மின்னழத்தம் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுரை காவல் நிலையம் அருகே உள்ள பந்தலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த துர்கா பந்தல் விழாவுக்கு சுமார் 150 பேர் வந்திருந்தனர். அதில் 30-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுக்கு ஆளாகினர். தீக்காயம் ஏற்பட்டவர்கள் கோபிகஞ்ச் மற்றும் ஆனந்த் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.