
சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சவரன் 38 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்வு. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 38,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிராம் 70 ரூபாய் அதிகரித்து 4,775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சவரன் 38 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. இதேபோல், வெள்ளி கிலோவுக்கு 4,200 ரூபாய் அதிகரித்து 66,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது.