

திருப்பதி திருமலையில் இன்று தேரோட்டம் கோலாகலமாக துவங்கி நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர் .
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவத்தையொட்டி தினம் தோறும் காலை மற்றும் இரவில் பெரிய சேஷம், சின்ன சேஷம், சிங்கம், அண்ணப்பறவை, முத்து பந்தல், சர்வ பூபாலம், மோகினி அவதாரம், கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்ற நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.