திருவாவடுதுறைஆதீனத்தில் விஜயதசமி விழா புதன்கிழமை நடைபெற்றது.பெரியபூஜை மடம்,ஸ்ரீஞானமாநடராஜபெருமான்,மெய்கண்டார், நமசிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் தொடர்ந்து சரஸ்வதி அம்மனுக்கு 24வதுஆதீனம் அம்பலவாண தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் சிறப்புஅபிஷேக,ஆராதனைகள்மற்றும் மாகேஸ்வர பூஜைசெய்வித்தார்.
பின்னர் மகாலிங்கஓதுவாமூர்த்திகளின் திருமுறை பாராயணம் நடைபெற்றது.இதில் பனை ஓலையில் அச்சாணி கொண்டு நமசிவாய என மந்திரம் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் எழுதி வெளியிட அதனை ஆதீன கட்டளை திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் பெற்றுக்கொண்டார். ஆதீன பணியாளர்களுக்கு கணக்கு புத்தகங்களை வழங்கியும், ஆதீன பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எழுதுபொருட்களை வழங்கி திருவாவடுதுறை ஆதீனம் ஆசி வழங்கினார்.ஆதீன பொது மேலாளர் திருமாறன்,ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம்,காசாளர் சுந்தரேசன், ஆதீனகல்வி நிலைய ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

